ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் ‘இன்னோவா ஹைக்ராஸ்’ மாடல் கார் அறிமுகம்

கோவை ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் ‘டொயொட்டா இன்னோவா ஹைக்ராஸ்’ எனும் புதிய கார் அறிமுக விழா நடைபெற்றது.

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா மாடல் வகை கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக இன்று வரை உள்ளது. இந்நிலையில் இன்னோவா மாடலில் புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இன்னோவா ஹைக்ராஸ் எனும் புதிய மாடல் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிமுக விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் நடைபெற்றது. இதில் ஷோரூமின் நிர்வாக இயக்குனர் விக்னேஸ்வர் இன்னோவா ஹைக்ராஸ் மாடல் காரை அறிமுகபடுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஷோரூமின் தலைமை மேலாளர்கள் மற்றும் ஏ.ஆர்.சி.குழும நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நிர்வாக இயக்குனர் விக்னேஸ்வர் கூறுகையில், இன்னோவா ஹைக்ராஸ் கார் லிட்டருக்கு 21.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலும், ஹைப்ரிட் வகையில் ஆட்டோமெட்டிக் எலக்ட்ரிக் இன்ஜின் ஆப்சனும் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இடவசதி மிகவும் தாராளமாக உள்ளது. அதிக நவீன வகை பாதுகாப்பு அம்சங்களுடன், டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹை பீம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.