இந்துஸ்தான் கல்லூரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டமும், வணிகவியல் துறை மற்றும் கோவை கேன்சர் பவுண்டேஷன் இணைந்து உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, முதல்வர் பொன்னுசாமி, கோவை புற்றுநோய் அமைப்பின் ஆலோசகர் சரஸ்வதி, கோவை புற்றுநோய் மருத்துவ அமைப்பின் மருத்துவர் ஹர்ஷா சிங், மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கருணாநிதி மற்றும் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் 400-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்திய படி பேரணியில் கலந்து கொண்டனர்.