பிப்.,16, 17 கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப மற்றும் கலைப் போட்டிகள்

கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் தொழில்நுட்ப மற்றும் கலைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த வருடத்திற்கான போட்டிகள் வரும் பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தொழில்நுட்ப பிரிவு போட்டிகளில் மொத்தம் 75 கருத்து பட்டறைகள், 100 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், 10 க்கும் மேற்பட்ட கண்காட்சிகள், ஹேகத்தான் போட்டிகள், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு படிப்புகளுக்கான படிப்பு சம்பந்தப்பட்ட அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. கல்லூரியின் அனைத்து துறைகளும் தங்களது துறை சார்ந்த தொழில்நுட்ப நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

கலைப் பிரிவு போட்டிகளில் இசை, நட்சத்திர இரவுகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கலச்சார போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் சினிமா, தொலைக்காட்சி, யூட்யூப் பிரபலங்கள், முன்னணி பாடகர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகள் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி சார்பாக நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மொத்தம் 5 லட்சம் ருபாய் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

இதில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லுரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கு பெற பதிவு செய்ய விருப்பம் உள்ள மாணவர்கள் 9442693467 எண்ணிலோ அல்லது kpriet.ac.in/fiestaa முகவரியிலோ சென்று பதிவு செய்து கொள்ளலாம்.