“பருத்தி இறக்குமதி வரி ரத்து அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிக்கின்றது”

– ஜெயபால், தலைவர், மறுசுழற்சி ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பு

மத்திய பட்ஜெட்டில் பருத்தி இறக்குமதி மீதான வரி ரத்து அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிப்பதாக மறுசுழற்சி ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: விவசாயத்துக்கு 20 லட்சம் கோடி ஒதுக்கீடு, ரயில்வே துறை மேம்பாட்டுக்காக 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு வரவேற்கதக்கது. அதே சமயம் ஜவுளி துறைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பருத்தி இறக்குமதி வரி ரத்து குறித்த அறிவிப்பு வராதது ஜவுளி துறை சார்ந்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்றது.

சர்வதேச விலையில் பருத்தி மற்றும் விஸ்கோஸ் இழை உள்நாட்டில் கிடைத்தால் மட்டுமே உலகளவில் போட்டியிட இயலும். ஜவுளி தொழில் கடந்த ஓராண்டாகவே மூலப்பொருள் விலை ஏற்றத்தினால் 50% கீழ் தான் ஜவுளி சங்கிலி தொடரே இயங்கி வருகின்றது.

இறக்குமதி கட்டுபாட்டை ரத்து செய்யாவிடின் 2022 போலவே கடும் நெருக்கடி ஏற்படும். எனவே, இந்த கூட்டத் தொடரிலேயே பருத்தி இறக்குமதிக்கு வரி ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.