அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் கார்களுக்கான விலை அறிவிப்பு

அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் கார்களுக்கான விலையை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிஎன்ஜி பிரிவில் டொயோட்டா கிளான்சா மற்றும் அர்பன் க்ரூசர் ஹைரைடர் ஆகிய கார்களை அறிமுகம் செய்தது. தற்போது அர்பன் க்ரூசர் காருக்கான விலையை அறிவித்துள்ளது.

ஜி வகை மேனுவல் கியர் செயல்முறை கார் விலை ரூ.15,29,000, எஸ் வகை மேனுவல் கியர் செயல்முறை கார் விலை ரூ 13,23,000. இந்தியா முழுவதும் ஒரே விலை.

இது குறித்து டொயோட்டா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு ஆலோசனை துணைத் தலைவர் அதுல் சூட் கூறுகையில், இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இதன் மீது அதிக ஆர்வம் காட்டிய வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதன் விலைகளை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

சிறந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி வகை கார்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை கொண்டிருப்பதோடு, வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த பிரிவில் முதல் வகைகளில் ஒன்றான அர்பன் க்ரூசர் ஹைரைடர் எஸ் மற்றும் ஜி ஆகிய மாடல்களில் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி வசதியுடன் கிடைக்கிறது. இரண்டு மாடல்களும் மேனுவல் கியருடன் வெளிவந்திருக்கிறது.

புதிய அர்பன் க்ரூசர் ஹைரைடர் அதன் கம்பீரமான தோற்றும் நவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் இணைந்துள்ளது.

17 இன்ச் அலாய் சக்கரங்கள், 9 இன்ச் ஸ்மார்ட் பிளேகாஸ்ட் டச்ஸ்கிரீன் ஆடியோ, 6 ஏர்பேக்குகள் மற்றும் டொயோட்டா ஐ-கனெக்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

1.5 லிட்டர் கே சீரிஸ் திறன் கொண்ட என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியருடன் சிஎன்ஜி வசதியுடன் வெளிவந்திருக்கும் இந்த கார் ஒரு கிலோ கியாசுக்கு 26.6 கிலோ மீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டதாகும்.

வாடிக்கையாளர்கள் இந்த காரை முன்பதிவு செய்ய இந்நிறுவனத்தின் www.toyotabharat.com/online-booking/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது அருகில் உள்ள டொயோட்டா டீலர்களை அணுகலாம்.