என்.ஜி.பி கல்லூரியில் இன்குபேஷன் சென்டர் திறப்பு

டாக்டர்.என்.ஜி.பி. தொழில்நுட்ப கல்லூரி, பைன்ஸ்பியர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூருடன் இணைந்து என்.ஜி.பி. ஐடெக் – பைன்ஸ்பியர் இன்குபேஷன் சென்டரை கல்லூரியில் நிறுவியுள்ளது.

பைன்ஸ்பியர் சொல்யூஷன்ஸ், தகவல் தொழில்நுட்ப நிலப்பரப்பில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளைப் பயன்படுத்தி சிறந்த, நம்பகமான மற்றும் உறுதியான, தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளர் தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி மையத்தை துவக்கி வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பிரபா, பைன்ஸ்பியர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர்கள் சுரேந்திரன், வசந்த் நாகராஜ், கணிப்பொறியியல் துறை தலைவர் பழனிக்குமார் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு கூடுதல் அறிவு மற்றும் நிகழ்நேர திட்டங்களில் வேலை செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கான வசதியை வழங்குவதை இன்குபேஷன் சென்டர் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய பொறியியல் செயல்பாடுகளை தயாரிப்புகளாக மாற்ற இந்த சென்டரை பயன்படுத்தலாம்.