நேரு கல்வி நிறுவனங்களில் வானவியல் குறித்த பயிற்சி பட்டறை

கோவை நேரு கலை அறிவியல் கல்லூரி மற்றும் நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரிகளின் சார்பில் இரண்டு நாள் வானவியல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இதில் விஞ்ஞான வளர்ச்சியை பற்றி தமிழில் எழுதுவதன் மூலம் தாய்மொழி தமிழில் மாணவர்கள் எழுதுவதை ஊக்குவிக்கும் விதமாக விஸ்காம் துறையை சேர்ந்த கல்லூரி மாணவர்களை கொண்டு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக புது டெல்லி, இந்திய அரசின், விஞ்ஞான் பிரசார், முதுநிலை ஆராய்ச்சியாளர் டிவி வெங்கடேஸ்வரன் மற்றும் அறிவியல் பலகை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார், நேரு இன்ஜினியரிங் கல்லூரியின் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் இயக்குனர் சங்கரன், நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன், மாநில ஒருங்கினைப்பாளர் மனோகர், கோவை ஆஸ்ட்ரோ கிளப் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

ஒவ்வொரு துறையிலும் விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனை புரிந்து கொண்டு பல்வேறு விளக்கங்கள், புதிய மாறுபாடுகள், புதிய நிகழ்வுகளை பற்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இரவு வால் நட்சத்திரத்தைப் பற்றியும், ஜுபிடர் முனை டெலஸ்கோப்பில் கண்டு என்னென்ன நிகழ்வுகள் நடைபெறுகிறது என்பதை நேரடியாக ஆராய்ச்சி மூலம் கண்டுக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.