கோவை மாவட்டதிற்கு புதிய ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 30 க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி கோவை ஆட்சியராக பணியாற்றி வரும் சமீரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த கிராந்தி குமார் கோவை மாவட்ட ஆட்சியராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

கோவை ஆட்சியராக இருந்த சமீரன், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக பொறுப்பேற்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.