
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதலாமாண்டு பயின்று வரும் மாணவர் பிரவீன், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் சிறந்த உடலமைப்பிற்கான தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இதில் 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இவர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் அடுத்த மாதம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்கிறார்.