
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவி லக்ஷ்னா, தேனியைச் சேர்ந்த வையைத் தமிழ்ச்சங்கம் உலகத் தமிழ்க்கூடல் அமைப்பு, இணையம் வழியாக மாநில அளவில் நடத்திய ‘சிலப்பதிகாரம்’ வினாடி வினா போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
தேனி வையைத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழ்க்கூடல் நிகழ்வினை நடத்தி வருகின்றது. அந்நிகழ்வின் ஒரு பகுதியாக மாநில அளவிலான சிலப்பதிகாரம் வினாடி வினா போட்டியினை இணைய வழியில் நடத்தியது.
இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து எட்டு மற்றும் ஒன்பது வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர் இளங்குமரன், ‘சிலப்பதிகாரம்’ காப்பியம் தொடர்பான வினாடி வினாவினை நடத்தினார்.
போட்டியில், சிவகங்கை மாவட்டம் தனுசியா முதலிடம் பெற்றார். சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவி லக்ஷ்னா இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு இணைய வழிச் சான்றிதழும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.
சிலப்பதிகாரம் வினாடி வினா போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற பள்ளி மாணவி லக்ஷ்னாவையும், மணாவர்களுக்குப் பயிற்சியளித்த தமிழாசிரியர்களையும் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.