கோவை பி எஸ் ஜி கல்லூரியில், தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டிகள் துவங்குகிறது

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 54-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பி.எஸ்.ஜி. டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திரு.எல்.கோபால கிருஷ்ணன், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வருமான டாக்டர். ருத்ரமூர்த்தி மற்றும் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப்பின் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கூறியதாவது, அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் முன்று நாட்கள் சுழல் முறையிலும், பின்பு நாக்கவுட் முறையிலும் போட்டிகள் நடைபெறும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அறையிறுதிக்கு தகுதி பெறும் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவர்கள்.
பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அணியில் டெல்லி, இந்தியன் ரயில்வே அணி, டெல்லி இந்திய விமான படை அணி, டெல்லி இந்திய ராணுவம் அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, பெங்களூரூ விஜயா பேங்க் அணி, கேரளா சுங்க வரித்துறை அணி, சென்னை வருமான வரி துறை அணி, மாநில போட்டியில் வெற்றி பெற்ற சென்னை ஐசிஎப் அணி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையும், பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், வழங்கப்படுகிறது.
இந்த போட்டிகள் வரும் 09 – ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்கும் தினமும் 4 போட்டிகள் நடைபெறும், இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.