நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா 

கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியில் மகா உத்சவ் எனும் 36வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் மோகன் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளியின் செயலர் உமா மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை (வடக்கு) துணை கமிஷனர் சந்தீஷ் கலந்து கொண்டு, பொது தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு, கலை போட்டிகளில் சிறந்து செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் விருதுகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் பள்ளியின் முதல்வர் பேபி, தலைமை ஒருங்கிணைப்பாளர் நிர்மலா மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.