இந்துஸ்தான் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை மற்றும் தரவு அறிவியல் சார்பில் கணித பயன்பாடுகள் மற்றும் சவால்கள் எனும் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தலைமை வகித்தார். கணிதத்துறை தலைவர் அனுராதா வரவேற்புரை வழங்கினார். இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதிகண்ணையன் மற்றும் செயலர் பிரியா சதீஷ்பிரபு ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

கருத்தரங்கில் இந்திய அறிவியல் அகாடமி குழு உறுப்பினர் கந்தசாமி பேசுகையில்: ஒரு தேசத்தின் வளர்ச்சி நிலையில் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய மூன்றும் முக்கியப்பங்கு வகிக்கின்றது. இதில் பொருளாதாரம் முதுகெலும்பாக உள்ளது.

கணித அறிவியலை மேம்படுத்த ஆழந்த நினைவுத்திறன் அவசியம். கணிதத்தின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் உள்ளது. அவை இல்லாமல் வளர்ச்சி இல்லை. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த இளைய வல்லுநர்களாக மாணவர்கள் புதுமையானவற்றை கண்டறிந்து வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

இக்கருத்தரங்கில் ஜப்பான் தோஷிஷா பல்கலைக் பேராசிரியர் கிரோசி யம்மா குச்சி மற்றும் நஷர் பயேவ் கசக்கிஸ்தான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர்டக் காஷ்கின் பயேவ் ஆகியோர் கணித பயன்பாடுகள் மற்றும் புதுமையான சவால்கள் எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.

பல்வேறு கல்லூரிகளில் இருந்து 200 மாணவர்கள் இதில் கலந்து கொண்டு அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.