கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி டீன் சுரேஷிற்கு விருது

சென்னையில் நடைபெற்ற ICT அகாடமி DigiGuru 2018 – (A National Teaching Video Contest) ஒரு தேசிய போதனை வீடியோ போட்டியை நடத்தியது. இதில் எளிமையான, தெளிவான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விஷயத்தை கற்பிக்கும் ஆசிரிய உறுப்பினர்களை அங்கீகரிப்பதற்கான போட்டியில் KIT-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரி டீன்- முனைவர் திரு. சீ.சுரேஷ் அவர்களுக்கு உயரிய விருது வழங்கப்பட்டது.இந்த விருதை பெற்ற கல்லூரி டீன் சுரேஷ், அவர்களை கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக் கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், கல்லூரி செயக்குழு அறங்காவலர் சூர்யா, கல்லூரி இயக்குனர் அன்பழகன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.