டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கும் வகையில் வி.ஐ சார்பில் ரூ.99 ரீசார்ஜ் பேக் அறிமுகம்

வோடஃபோன் ஐடியா நெட்வொர்க், அடித்தட்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் எளிதில் பயன்பெறும் வகையில் இந்தியா முழுவதும் ஆரம்ப நிலை ரீசார்ஜ் ஆக ரூ.99 பேக்கை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.99 ரீசார்ஜில், 28 நாட்கள் வேலிடிட்டி, 200 எம்பி டேட்டா மற்றும் முழுமையான டாக்டைம் வழங்கப்படுகிறது.

இது பற்றி வோடஃபோன் ஐடியாவின் தமிழ்நாடு, கேரளா மண்டலத்திற்கான வர்த்தகப் பிரிவு தலைவர் முரளி பேசுகையில்: மொபைல் வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர்கள் அல்லாதோரும் கூட வெறும் ரூ.99-ல் அதிவேக வோடஃபோன் ஐடியா நெட்வொர்க் வழங்கும் ரீசார்ஜை பெறலாம். இதன் மூலம் அவர்களும் இந்த டிஜிட்டல் யுகத்தில் மொபைல் இணைப்பின் பலன்களைப் பெறுவதைத் தொடர வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறோம்.

சமூகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் பங்கேற்குமாறு மட்டும் அழைக்கவில்லை, அதோடு டிஜிட்டல் மாற்றத்திற்குள் பல வாடிக்கையாளர்கள் தங்களையும் இணைத்துக்கொள்ளவும் இது உதவும் என்று தெரிவித்தார்.

வோடஃபோன் ஐடியா சந்தையிலுள்ள தனது கிராமப்புற ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை முழுவீச்சில் வழங்க புதிய வடிவிலான வோடஃபோன் ஐடியா விற்பனையகங்களையும் திறந்துள்ளது.