என்.ஜி.பி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

டாக்டர் என்.ஜி. பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு மற்றும் 2011-2015 ஆம் ஆண்டுக்கான முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கல்லூரியின் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியை சரண்யா வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்வில் கல்லூரியின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி தலைமை வகித்தார்.

கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் ஒருவரான மருத்துவ இயற்பியலாளர் மற்றும் பயன்பாட்டு நிபுணர், ஸ்கேன்-ஓ பிளான் சிஸ்டம்ஸ் இந்தியா, பயன்பாட்டு நிபுணர், மிதுன் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அவர் தனது சிறப்புரையில், முன்னாள் மாணவர்கள் மற்றும் நிறுவனத்திற்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் என்.ஜி.பி. கல்லூரியில் கடைபிடிக்கின்ற ஒழுக்கம் தனது வாழ்க்கை இலக்கை அடைவதற்கு எவ்வாறு உதவியது என்பதையும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் செய்தி மடலை செயலர் தவமணிதேவி பழனிசாமி வெளியிட்டார். அதனை சிறப்பு விருந்தினர் மிதுன்குமார் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் 23 சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அனைத்து முன்னாள் மாணவர்களும் என்.ஜி.பி. கல்லூரியில் கல்வி பயின்றபோது தாங்கள் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.