கே.எம்.சி.ஹெச் முதன்மை செயல் அதிகாரிக்கு மருத்துவ தொலைநோக்கு தலைமை விருது

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சிவகுமாரனுக்கு மருத்துவ தொலைநோக்கு தலைமை விருது வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில், குறிப்பாக இன்வென்டரி மற்றும் செயல்பாட்டுத் திறனில் சிறந்து விளங்கியமைக்காக அவருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முன்னணி வர்த்தக நாளிதழான பைனான்சியல் எக்ஸ்பிரஸ், மருத்துவத் துறையில் சிறந்த தலைமைப் பண்பு, புதுமைகள் புகுத்துதல், நோயாளிகள் மற்றும் சமூகத்தினரின் நலனை மனதில் கொண்டு மருத்துவத் துறை முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பாக செயல்படுவோரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கும் டாக்டர் சிவகுமாரன் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதுக்காக பல முன்னணி மருத்துவமனைகளைச் சேர்ந்த முதன்மை செயல் அதிகாரிகள் மற்றும் முதன்மை நிதி அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய 500 பேர் பட்டியலில் இருந்து 50 பேர் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 19-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளிதழின் டிஜிட்டல் ஹெல்த் மாநாட்டில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. கோவையில் இருந்து இந்த பெருமைமிகு விருது பெறுபவர் டாக்டர் சிவகுமாரன் மட்டுமே என்பது பெருமைக்குரியது..

டாக்டர் சிவகுமாரன் முப்பதாண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் சேவையாற்றி வருகிறார். மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு பிரபல ஆய்விதழ்களில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

டாக்டர் சிவகுமாரன் அவர்களுக்கு மருத்துவ தொலைநோக்கு தலைமை விருது கிடைத்துள்ளதை மிகவும் பெருமைக்குரியதாகக் கருதுகிறோம். கேஎம்சிஹெச் மருத்துவமனை வளர்ச்சியிலும் வெற்றியிலும் டாக்டர் சிவகுமரன் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். அவருடைய கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இந்த விருது ஒரு சான்றாகும் என்று கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தனது பாரட்டுரையில் தெரிவித்துள்ளார்.