வேளாண் பல்கலையில் உள்கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறையின் உள்கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி திறந்து வைத்தார்.

புதிதாக நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளில் 100 நபர்கள் அமரும் வகையில் பயிற்சி அரங்கம், காணொலி கருத்தரங்கு, முதுகலை ஆய்வுக்கூடம், திருவள்ளுவர் சிலை, சிலைக்கு அருகில் உள்ள நுழைவாயில் ஆகியவை அடங்கும்.

துணைவேந்தர் கீதாலட்சுமி 115 வருடம் பழமையான தாவரவியல் பூங்காவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்து தலைமையுரையாற்றினார். ராசி விதைகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தாவரவியல் பூங்காவின் முப்பரிமாண படம் முதுகலை மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது.