பி.எஸ்.ஜி மருத்துவமனையில் குடியரசு தின விழா

பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 74 வது குடியரசு தின விழா மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. ரீசர்ச் அண்ட் இன்னோவேஷன் டைரக்டர் டாக்டர் சுதா ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தேசியக் கொடியை ஏற்றினார்.

அவர் தன் சிறப்புரையில், அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் குழுவில் 200 பேர் இருந்தனர். அதில் 30 % பெண்கள் இடம் பெற்றிந்தனர். இந்தியா உட்பட பல நாடுகளில் பெண்களுக்கு அப்போது வாக்குரிமை கூட இல்லாத காலத்தில் நம் சட்டத்தை இயற்றிய குழுவில் பெண்கள் பங்கு வகித்தது மிகவும் முக்கியமானதும், பாராட்டத்தக்கதும் ஆகும்.

தற்போது இருக்கும் ஆராய்ச்சிகளை விட இன்னும் புதுமையான ஆராய்ச்சி முறைகள் இருந்தால் தான் நம்மால் மேலும் முன்னேற முடியும். மேலும் புதுமையான அணுகுமுறை மாணவர்களிடம் வரும்போது நாட்டை வலுவானதாக கட்டமைக்க முடியும் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சுப்பா ராவ், மருத்துவ பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.