கோவையில் பி.எஸ்.ஜி. சார்பில் ஆசிரியர் தின விழா

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. சன்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா கோவை பி.எஸ்.ஜி. டெக் கல்லூரி அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கவுரவித்தார். இதில் பி.எஸ்.ஜி. கல்வி குழுமத்தில் உள்ள பிரைமரி பள்ளி, பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பார்மஸி, தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றில் இருந்து ஆசிரியர்களுக்கு 65 பேர் கவுரவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பி.எஸ்.ஜி. கல்வி குழுமத்தின் முன்னாள் ஆசிரியர்கள் 40 பேரும் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. டெக் முதல்வர் ருத்ரமூர்த்தி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ், கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.