கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் டெக் மஹிந்திரா இணைந்து, ‘சதக் சுரக்ஷா’ என்ற கருப்பொருளின் கீழ் “தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு” நிகழ்ச்சியை நடத்தியது.

கணியூர் சுங்கச்சாவடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுக்கவும், உயிரைக் காப்பாற்றவும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி வட்டார ஆய்வாளர் ராஜதுரை கலந்து கொண்டு, சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும், சாலைகளில் தங்களுடைய மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குடிமக்களின் பங்கு குறித்தும் சிறப்புரையாற்றினார்.

டெலிவரி மேலாளர் ராம்மோகன் மற்றும் டெக் மஹிந்திராவின் செயல்பாட்டு மேலாளர் சரவணக்குமார் மணியன் ஆகியோர் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், சாலைகளில் விபத்துகளைக் குறைப்பதற்கும் நிறுவனத்தின் பங்கை எடுத்துரைத்தார்.

IVRCL இன் மேலாளர் ராஜ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்வதில் கட்டுமானத் துறையின் பங்கு பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கேபிஆர் பொறியியல் கல்லூரியில் பதிவாளர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக் குழுவின் இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் உரையாற்றினர்.

கல்லூரியின் தேசிய மாணவர் படை மற்றும் தேசிய தன்னார்வ சேவை அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஆண்டிகிளேர் ஸ்டிக்கர்கள் மற்றும் ஃபிளையர்களை விநியோகித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தனர்.

மேலும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து, போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.