குடியரசு தின அணிவகுப்புக்கு இந்துஸ்தான் கல்லூரி மாணவர் தேர்வு

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் தேவானந்த் சென்னையில் நடைபெறும் மெரினா குடியரசு தின விழா அணிவகுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விழாவனது ஆண்டுதோறும் ஜனவரி 26 ம் தேதி நடைபெறும். தமிழக முதல்வர் தேசிய கொடியை ஏற்றி நாட்டுமக்களுக்கு சிறப்புரையாற்றுவார். அதன் பின்பு நடைபெறும்  அணிவகுப்பில் முப்படை வீரர்கள் காவல்துறை வீரர்கள், என்.சி.சி மாணவர்கள், என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் பல்வேறு சீருடை வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும் நம் நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த கலை, கலாச்சார மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த காட்சி வாகனங்களும் இடம்பெறும். இம்முகாமில் கலந்து கொள்வதற்காக தமிழக முழுவதிலும் இருந்து சிறந்த என்.சி.சி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு கெமிக்கல் இன்ஜினியரிங் பயிலும் மாணவர் தேவானந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவர் கடந்த ஜூலை மாதம் முதல் கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற சுமார் 7 க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்களில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்டார். இதனால் சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவிற்கு ராணுவப்படை பிரிவில் கலந்துகொள்கிறார்.

மாணவரின் திறமையை இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதீஸ்பிரபு ஆகியோர் வாழ்த்தினர். மேலும் கல்லூரியின் முதல்வர் ஜெயா, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், என்.சி.சி அலுவலர் லெப்டினன்ட் மனோஜ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.