குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் பயிற்சிக்கல்வி மாநாடு

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின், இருதயவியல் துறை சார்பாக, ‘ஸ்பான்டான்’ (SPANDAN 2023) என்ற இரண்டு நாள் பயிற்சிக்கல்வி மாநாட்டின் முதல் பதிப்பு சமீபத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சிக்கல்வி வகுப்பில், “டிரான்ஸ்கதீட்டர் அயோடிக் வால்வு மாற்றீடு குறித்த TAVR இன் அடிப்படைகள்” பற்றி விரிவாக விளக்கப்பட்டது. மேலும், தேசிய மற்றும் சர்வேதேச அளவிலான ஆசிரியர்கள், நேரடியாக செயல்முறையோடு பயிற்சி அளித்தனர்.

ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜ்பால் கே. அபாய்சந்த் பாடநெறி இயக்குநராகவும், புடாபெஸ்டைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் ஆண்ட்ரேகா சர்வதேச ஆசிரியராக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோகரன், இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சுந்தர ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.