மூடிகிடக்கும் மத்திய அரசின் நூற்பாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

கோவையில் மூடி கிடக்கும் மத்திய அரசின் தேசிய நூற்பாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கூட்ட அரங்கில் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி சபையின் தலைவர் ஸ்ரீ ராமு தலைமையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டார்.

செயலாளர்கள் கார்த்திகேயன், அண்ணாமலை, துணைத் தலைவர்கள் ராஜேஷ் பி லந்து, துரைராஜ், சுந்தரம், பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள் வனிதா மோகன், நந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

இதில் கோவை தொழில் வளர்ச்சிக்கு தேவையான சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மத்திய அரசு வாட் வரிவிதிப்பை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கோவை விமான நிலையத்தை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை இடம்பெற்று இருந்தது.

மேலும் ரயில் திட்ட பணிகள் மேம்படுத்தவும், எல் அண்ட் டி பைபாஸ் சாலையை விரிவாக்கவும், தேசிய பஞ்சாலை மில்கள் மூடி கிடப்பதை ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டது.

இந்த கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு கொண்டு சென்று கோவை தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று சண்முகசுந்தரம் எம்பி., யிடம் முன்வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் தனது பதில் உரையில், கோவை மாவட்டம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்றும் அதற்கு சில புள்ளி விவரங்களை முன்வைத்து பேசினார்.

 

(இதுபற்றிய விரிவான விவரம் விரைவில் பதிவேற்றப்படும்)