துளசி தரும் மகத்துவம்

துளசி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேவையற்ற வெப்பத்தை குறைக்குமே தவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. தினமும் 20 துளசி இலையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் இருந்து குணமாகும்.

துளசி இலைச்சாறு ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையில் இருந்து நீக்கவும் உதவுகிறது.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி உடையது.

துளசி இலைச் சாற்றில் தேன், இஞ்சி கலந்து ஒரு தேக்கரண்டி குடித்து வரலாம். சளி, மற்றும் இருமல் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை துளசிக் கஷாயம் கொடுத்தால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பேன், பொடுகு தொல்லை நீங்க துளசி சாறு எடுத்து அதனுடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.