பெப்சியின் பிராண்ட் அம்பாஸிடராக நடிகர் யாஷ் நியமனம்

பெப்சி தனது பிராண்ட் தூதராக நடிகர் மெகாஸ்டார் யாஷை நியமித்துள்ள அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இக்கூட்டாண்மை குறித்து பெப்சிகோ இந்தியாவின், பெப்சி கோலா வகையினத்தலைவர் சௌமியா ரத்தோர் கூறியதாவது: ராக்கிங் ஸ்டார் யாஷுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். யாஷ் பல்வேறு புவியியல் பிராந்தியங்களில் இளைஞர்கள் மீது வலுவான இணைப்பையும் செல்வாக்கையும் பெற்றுள்ளார். பிராண்டின் தடத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில், நுகர்வோர் இணைப்பை ஆழப்படுத்துவதில் யாஷ் முக்கியப்பங்கினை வகிக்கவுள்ளார்.

யாஷ் அவர்களை ஒரு புதிய அவதாரத்தில் காண்பிக்க தயாராகி வருகிறோம். இது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தும் என்று கூறினார்.

பெப்சி.,யின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் யாஷ் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதாவது: பெப்சியின் தத்துவத்திற்கு ஏற்ப எனது ஆர்வத்தை தயக்கமின்றி பின்பற்றுகிறேன். புதிய ஆண்டைத் தொடங்க இது ஒரு சிறந்த வழியாகும், மேலும் எனது ரசிகர்கள் என்னை ஒரு புதிய அவதாரத்தில் பார்க்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறினார்.