குடியரசு அணிவகுப்பில் கலந்து கொள்ளும் கே.பி.ஆர் மாணவி

கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவி சத்யா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள குடியரசு தின விழா (ஜனவரி 26) அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இவர் என்.சி.சி தமிழ்நாடு இயக்குநகரத்தை பிரதிநிதி படுத்துகிறார். மெரினா கடற்கரையின் அணிவகுப்பில் 51 சீனியர்விங் பிரிவுக்கு தேர்வாகியுள்ளார்.

கோவை 4 தமிழ்நாடு பட்டாலியன் கமெண்டிங் ஆபிசர் லெப்ட்நெண்ட் பாரத், கல்லூரியின் சார்பில் கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி, முதல்வர் கீதா, தலைமை நிர்வாக அதிகாரி பாலுசாமி, என்சிசி கேர் டேக்கர் ஸ்ரீதர், கல்லூரி பேராசிரியர்கள் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.