ஒரு கொத்து திராட்சைக்கு இத்தனை லட்சம் விலையா?

ஒரு பொருளை பேரம் பேசி விலை குறைத்து வாங்குவதற்கு இந்தியாவை மிஞ்சிய ஆட்கள் இல்லை . ஆனால் அப்பேர்ப்பட்ட இந்தியர்களை மலைத்துப் போக வைக்கும் அளவுக்கு இந்த திராட்சையின் விலை இருக்கிறது. அப்படி அந்த திராட்சையில் என்ன ஸ்பெஷல் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ஜப்பானின் “ரூபி ரோமன் “ என்ற திராட்சையின் விலை 8 லட்சம் ரூபாய் .. இதனாலேயே உலகின் அதிக விலை கொண்ட திராட்சை என்ற உலக சாதனை பட்டியலிலும் இந்த ரூபி ரோமன் இடம் பிடித்திருக்கிறது.

ஜப்பானின் இந்த ரூபி ரோமன் திராட்சை சாதாரணமான திராட்சை பழத்தை காட்டிலும் நான்கு மடங்கு பெரிதாக இருக்கும். இந்த வகை திராட்சைகளின் அறுவடை ஜூலையில் முடிந்து ஜப்பானின் விடுமுறை காலத்தில் ஒச்சுகென் என்ற முறையை கடைப்பிடித்து அதனை பரிசாக கொடுப்பார்கள்.

2020ம் ஆண்டு ஒரு கொத்து ரூபி ரோமன் வகை திராட்சை பழங்கள் 12,000 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விலை போயிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 9 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்.

ஒரே ஒரு ரூபி ரோமன் திராட்சை பழத்தின் விலையே 30,000 ரூபாய்க்கு ஹியோகோ மாகாணத்தின் அமகாசாகியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது என ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது.