பார்வையை தெளிவாக்கும் பிஸ்தா பருப்பு

பலரும் பிஸ்தாவில் அதிக ஊட்டச்சத்து இருக்கும் என்பதால் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அச்சத்துக்கள் குறித்து முழு தகவல்களை தெரிந்து கொள்ளாமல் சாப்பிடுகிறோம்.

பிஸ்தாவின் முழு சத்துக்களை இத்தொகிப்பில் பார்க்கலாம்.

பிஸ்தாவில் அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு பயன்படுகிறது. சூடான பாலில் பிஸ்தாவை ஊற வைத்து தினமும் மாலை வேளையில் குடித்து வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும். பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ தோல்புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் சருமத்தை பாதுகாக்கிறது. இதில் உள்ள காரோட்டீனாய்டுகள் கண்ணின் விழித்திரையை பாதுகாத்து தெளிவான பார்வைக்கு வழிவகுக்கிறது. இது உடலின் கேட்ட கொழுப்புகளை குறைத்து ஆரோக்கியமான HDL கொழுப்புகளை அதிகரிக்கும் திறன் கொண்டது.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரும் சிறந்த பருப்பு வகையாக பிஸ்தா இருக்கிறது. மன அழுத்தத்தால் வரும் ரத்த கொதிப்பை தடுத்து ரத்த ஓட்டத்தையும் சீராக்கி ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.