கோவையில் மிராஸ் காபியின் நேரடி விற்பனை மையம் துவக்கம்

கோவையில் மிராஸ் காபியின் முதல் நேரடி விற்பனை மையம் ஆர்.எஸ்.புரத்தில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த நேரடி விற்பனை மையத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிராஸ் காபியின் அக்ரஹாரம் பிளெண்ட், பிளான்டேஷன் பிபி பிளெண்ட் மற்றும் மிராஸ் ஸ்பெஷல் பிளெண்ட் ஆகிய மூன்று வெவ்வேறு ரக காபி தூள்களும் நேரடியாகவே அரைத்து வழங்கப்படும்.

மேலும் மிராஸின் சொந்த தயாரிப்புகளான எண்ணெய், நெய், தேன் போன்ற வீட்டுக்கு தேவையான அன்றாட பொருட்களையும் இங்கு வாங்க முடியும். மேலும் இந்த நேரடி விற்பனை மையத்தில் மிராஸின் சூடான பில்டர் காபியும் கிடைக்கும்.

மிராஸின் நேரடி விற்பனை மையத்தை மிராஸ் காபி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரமணியன், முதன்மை இயக்குனர் சுந்தர் சுப்ரமணியன் மற்றும் நிதி இயக்குநர் வள்ளிமயில் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் சிபிஐயின் முன்னாள் சிறப்பு அரசு வழக்கறிஞர் மற்றும் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு திறந்து வைத்தார்.