கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஏபிபி குளோபல் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் சர்வீசஸ் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன் மூலம் எலெக்ட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் மென்பொருள் துறையில் கேபிஆர் கல்லூரியின் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய வேலை வாய்ப்புகள், சான்றிதழ் படிப்புகள், குறுகிய கால படிப்புகள் மற்றும் கல்வித் திட்டங்களை தனது ஆழ்ந்த நிபுணத்துவத்தை விரிவுபடுத்தும்.

மேலும், பெங்களூரு ஏபிபியில் பயிற்சி பெறும் தகுதியுடைய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உதவியை கூடுதலாக வழங்கும். தகுதியுடைய அனைத்து மாணவர்களும் தங்கள் இன்டர்ன்ஷிப் காலத்தில் ஏபிபி-யின் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறுவார்கள்.

மேலும் கே.பி.ஆர் கல்லூரி எந்தவொரு பயிற்சி திட்டத்திற்கும் ஆய்வக வசதிகளை ஏ பி பி நிறுவனத்திற்கு வழங்கும். நடத்தப்படும் அனைத்து வகையான தொழில்நுட்ப நடவடிக்கைகள், கூட்டுத் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளில் ஏபிபி நிறுவன ஊழியர்களுடன் இணைத்து செயல்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் ஏபிபி நிறுவனத்தின் சார்பாக அதன் முழு நேர இயக்குனர் சுப்பாராவ், இந்தியாவிற்கான ஆபரேஷன் சேல்ஸ் தலைவர் பிரவின்குமார், உலகளாவிய மனிதவள தலைவர் வைபவ்ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரின் முதல்வர் அகிலா இது பற்றி கூறும்போது: தொழில்துறை, 4.0 பாடத்திட்டம், பயிற்சி, கூட்டு சான்றிதழ் திட்டம், வேலைவாய்ப்புகள் மற்றும் ஏபிபி உடனான கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை உருவாக்க மற்றும் ஒருங்கிணைக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.