வெட்டிவேருக்கு இவ்வளவு சக்தியா?

வெட்டிவேர் என்பது மிகச் சிறந்த மூலிகை மருந்தில் ஒன்று. இது பல உடல்நல பிரச்சனைகளுக்கு  ஒரு தீர்வாக அமையும்.

வெயில் காலமாக இருந்தாலும் குளிர் காலமாக இருந்தாலும் பருக்கள் அதிகமாக வந்தால் அதற்கு வெட்டிவேர் மருந்தாக பயன்படும் என்று நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெட்டிவேரின் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாளாக ஆறாமல் இருக்கும் புண்கள் மீது தடவினால் அவை விரைவில் மறைந்துவிடும் .அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை உடலில் தேய்த்து குளித்தால் உடலுக்கும் நன்மை தரும்.

வெட்டிவேருடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலர விட்டால் முகப் பருக்கள் நீங்கி முகம் அழகாக மாறிவிடும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

பருக்கள் மறைந்தாலும் ஒரு சிலருக்கு பருக்கள் இருந்த தழும்புகள் மட்டும் போகாது இதற்கு வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு ஒரு நாள் இரவு ஊற வைத்து மறுநாள் நன்றாக கொதிக்கவைத்து அந்த தண்ணீரில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள பருக்களின் தழும்புகளும்  மறைந்து விடும்