குமரகுரு கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அவதார் ஹியூமன் கேபிட்டல் டிரஸ்ட் மற்றும் குமரகுரு லிபரல் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி இணைந்து ‘உத்யோக் உத்சவ் 2023’ இன் 6வது பதிப்பை கல்லூரி கலையரங்கத்தில் நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கலந்துகொண்டார். புத்ரி திட்டத்தின் மூலம் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.