புரோசோன் மாலில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நாளையுடன் நிறைவு

கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோசோன் மாலில் நாளை (22.01.2023) வரை எண்டு ஆஃப் சீசன் சேல் என்ற பெயரில் 50% வரை மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.

இது குறித்து புரோசோன் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) பாபு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்க தலைவர் முசாமில், செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் முரளி ஆகியோர் கூறியதாவது: இந்த ஆண்டின் இறுதி சலுகை விற்பனையாக இன்றும் (ஜனவரி 21), நாளையும் 2023 ஜனவரி 22-ம் தேதி வரை 50% வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.

இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான துணிகள், காலனிகள், மொபைல் போன்கள், மொபைல் உதிரிபாகங்கள், கண்கண்ணாடிகள், சுற்றுலா பேக்குகள், உணவுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கலாம்.

இன்றும் (ஜனவரி 21), நாளையும் (ஜனவரி 22-ம்) வாடிக்கையாளர்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலவசமாக பார்க்கிங் செய்துகொள்ளலாம்.