பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மருத்துவ அறிவியல் தமிழ் கருத்தரங்கம்

பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் தமிழ்ச்சங்கம் சார்பில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியும், மருத்துவ கல்லூரியும் இணைந்து “மருத்துவ அறிவியல் தமிழ்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும், “இருதய செயலின்மை – அறிவோம் அத்துனையும்” என்ற புத்தகத்தையும், மருத்துவ சமுதாய அறிவியல் பாடல்களையும் வெளியிட்டனர். இந்நிகழ்வில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தியாகராஜன், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் முதல்வர் மாரியப்பன், பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் தமிழ் சங்கத்தின் செயலாளர் முருகேசன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சுப்பாராவ், மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரன், கலை அறிவியல் கல்லூரியில் செயலாளர் கண்ணயன் மற்றும் முதல்வர் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.