கூந்தலுக்கு கற்றாழையின் நன்மைகள்!

கற்றாழை முடிக்கு சிறந்த இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இது வேர்களிலிருந்து முடியை வளர்ச்சி படுத்துவதற்கும் வலிமை படுத்துவதற்கும் சிறந்த ஒன்று .

கற்றாழைச்சாறை குடிப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதால் முடியை உள்ளிலிருந்து ஆரோக்கியமானதாக உருவாக்குகிறது. அதனால் வலுவான ஆரோக்கியமான முடி நமக்கு கிடைக்கிறது.

கற்றாழை தலையை ஈரப்பதமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் தலையில் இருக்கும் சிறு புண்களை ஆற்றவும், வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது.

பொடுகு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. தலையில் அதிகப்படியான எண்ணெயை அகற்றி தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.

கற்றாழையை தலையில் தேய்த்து வர தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வதையும் முடி உடைவதையும் தடுக்கும். மேலும் முடிக்கு நல்ல பளபளப்பும் தரும்.

கற்றாழைச் சாற்றை எப்போது வேண்டு மானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெறும் வயிற்றில் எடுப்பது நல்லது. அல்லது உணவிற்கு முன்பு எடுப்பது நல்லது. சிறிய அளவில் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர உடலுக்கு பெரும் நன்மை பயக்கும்.