தூங்கும் போது மூளை வளரும் பறவை (கருப்பு-தலை சிக்கடி)

குளிர்காலம் வந்துவிட்டாலே தாவரம் முதல் மனிதன் வரை குளிரை சமாளிக்க தான் பார்க்கிறோம் மனிதனை விட விலங்குகளுக்கு உயிர்வாழ சில பண்புகள் இயற்கையாகவே உள்ளது.

உதாரணமாக கரடியை எடுத்துக்கொண்டால் கடும் குளிர் காலம்  முடியும் வரை தூங்கும்.

பறவைகளைப் பொறுத்தவரை, குளிர்காலத்தில்  இறகுகளை வளர்க்கின்றன. அது தரும் வெதுவெதுப்பால் பறவையில் உடல் சூடாக இருக்கின்றன.ஆனால் ஒரு குறிப்பிட்ட பறவை இனம் தன்னை பாதுகாத்து கொள்ள மூளை திசுக்களை வளர்க்கின்றன.

உள்ளங்கை அளவிலான கருப்பு-தலை சிக்கடி (black-capped chickadee) எனும் பறவை வடக்கு அமெரிக்கா மற்றும் தெற்கு கனடாவின் பெரிய பகுதிகளில் காணப்படுகிறது. இது தூங்கும்போது இறகுகளுக்குப் பதிலாக மூளை திசுக்களை வளர செய்கின்றன.

இந்த கூடுதல் மூளை திசுக்கள், உணவுப் பொருளைப் புதைத்து வைத்த இடத்தை பறவைக்கு ஞாபகப்படுத்த உதவுகிறது. குளிர்காலத்தில் பசி எடுக்கும் போது, ​​பறவை இந்த புதைகுழிகளுக்குத் திரும்புகிறது.