அதிகளவு கீரை ஆபத்து

கீரை என்னதான் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் அளவுக்கு அதிகமாகஅதை உட்கொள்ளும்போது ஆபத்துதான். அந்த வகையில் கீரையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் வரும் பிரச்சனைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஊட்டச்சத்து உறிஞ்சலை தடுக்கும் : கீரை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் உடல் ஊட்டச்சத்து உறிஞ்சலை தடுக்கிறது. இதனால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய தாதுக்கள் கிடைக்காமல் போகிறது.

வயிற்று வலி : கீரையை அளவுக்கு மீறி சாப்பிட்டால் வயிறு பிடித்துக்கொண்டு கடுமையான வலியை உண்டாக்கும்.

உடல் நல பாதிப்பு : குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்புகளை உண்டாக்கலாம். எனவே குழந்தைகளுக்கு அளவாக கொடுப்பது நல்லது.

ஒவ்வாமை : லாடெக்ஸ் உணர்திறன் இருப்பவர்கள் கீரையை அதிகமாக உட்கொண்டால் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

இரத்த அடர்த்தியை குறைக்கும் : இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் ஆற்றல் கீரைக்கு உண்டு என்பதால் அளவாக உட்கொள்வது நல்லது.

நார்ச்சத்து ஆபத்து : உடலுக்கு நார்ச்சத்து அவசியம்தான் என்றாலும் அளவுக்கு அதிகமானால் ஆபத்து. அந்தவகையில் கீரை நார்ச்சத்து நிறைந்தது என்பதால் அளவாக சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு நல்லது.

செரிமானமின்மை : அளவுக்கு அதிகமான கீரை நுகர்வு செரிமானத்தை பாதிக்கிறது. எனவே வயிறு வலி, மந்தமான உணர்வு, நெஞ்சு எரிச்சல் போன்ற உபாதைகளை அனுபவிக்கலாம். ஏற்கெனவே செரிமான பிரச்சனை இருப்பவர்கள் கீரையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.