
கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக“KGAHS CONNECT -2023” எனும் மாநில அளவிலான விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கான போட்டிகள் இரண்டு நாட்கள் சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில்உள்ள மைதானத்தில் இன்று தொடங்கியது.
மாநில அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 கல்லூரிகளை சார்ந்த 1300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகளை கோவை மாநகர காவல்துறை துணை பொது ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் 100 மீட்டர், 200 மீட்டர், தொடர்ஓட்டம், குண்டுஎறிதல், வட்டுஎறிதல், ஈட்டிஎறிதல், எரிபந்து, கேரம், வாலிபால் போன்ற விளையாட்டு போட்டிகளும், மேலும் தனிநடனம் மற்றும் குழுநடன போட்டிகளும் நடத்தப்படுகின்றன.