என்.ஜி.பி கல்லூரியில் சொற்பொழிவு நிகழ்ச்சி

டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ் மன்றம் சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் செயலாளர் டாக்டர் தவமணி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் பிரபா வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு சொற்பொழிவாளர் கோ.பா.இரவிக்குமார் சிறப்பு விருந்தினராககலந்துகொண்டு, கற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மாணவர்கள் அவர்களை பக்குவப்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.