ஜனவரி 31 வரை கே.எம்.சி.ஹெச் சார்பில் கர்பப்பை வாய் பரிசோதனை முகாம்

கோவை அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் பெண்களுக்கான கர்பப்பை வாய் பரிசோதனை முகாம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பரிசோதனை, சலுகை கட்டணத்தில் செய்யப்படுகிறது. மேலும் கர்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.

எதனால் இப்புற்றுநோய் ஏற்படுகிறது?

கர்பப்பை வாய் புற்றுநோய் என்பது 15 முதல் 44 வயதிற்குட்பட்ட இந்தியப் பெண்களிடையே காணப்படும் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகும். இந்தப் புற்றுநோய் ‘ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி. / HPV) மூலம் ஏற்படுகிறது.

சுமார் 80 – 90 சதவீதம் பெண்களுக்கு உடலுறவு மூலம் எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்படலாம். 10-15 சதவீதம் பெண்களுக்கு இது புற்றுநோயாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வைரஸ் தொற்றுக்கு எந்த அறிகுறியும் கிடையாது. குறிப்பிட்ட காலத்தில், பரிசோதனை மட்டும் தான் இத்தொற்றை கண்டறிய உதவும். பரிசோதனைகள் மற்றும் தகுந்த சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்திவிடலாம்.

பரிசோதனை முறைகள்

கர்பப்பை வாய் புற்றுநோயினை கண்டறிய இருவகையான பரிசோதனை முறைகள் உள்ளன. முதலாவது, வழக்கமாக செய்யப்படும் பேப் ஸ்மியர் பரிசோதனை. இதில் கர்ப்பப்பைவாயில் இருந்து செல் எடுக்கப்பட்டு அது பரிசோதிக்கப்படும். பரிசோதனையில் செல்லில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை கொண்டு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து கண்டறியப்படும். இப்பரிசோதனையின் மூலம் பெறப்படும் முடிவுகளின் துல்லியத்தனமை, 60 – 70 சதவீதம் இருக்கும்.

இரண்டாவது முறை, அதிநவீன எச்.பி.வி., பரிசோதனை. இதில், ‘செல்’ லை நேரடியாக பகுப்பாய்வு செய்து அதில் எச்.பி.வி., வைரஸ் உள்ளதா என கண்டறியப்படுகிறது. இப்பரிசோதனையின் துல்லியத்தன்மை பல மடங்கு அதிகம். இதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அல்லது ஏற்படாது என்பதை துல்லியமாகக் கூற முடியும். எச்.பி.வி., வைரஸ் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போதுதான் பேப் ஸ்மியர் பரிசோதனை பயன்படும். ஆனால், எச்.பி.வி., பரிசோதனை பாதிப்பு ஏற்படும் முன்னரே கண்டறிய உதவுகிறது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

முகாமில் யார் கலந்துகொள்ளலாம்?

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஒழுங்கற்ற அல்லது அதிகமான மாதவிடாய் ரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு, காரணம் தெரியாத எடை இழப்பு, அடிவயிற்றில் தொடர்ந்து வலி, தாம்பத்ய உறவுக்கு பின் ரத்தப்போக்கு, பிறப்புறுப்பில் துர்நாற்றத்துடன் திரவம் அல்லது வெள்ளைப்படுதல், காரணம் தெரியாத பசியின்மை, மாதவிடாய் காலங்களுக்கு இடையே தொடர்ந்து ரத்தப்போக்கு, மேற்கண்ட ஏதேனும் ஒரு அறிகுறிகள் உள்ளவர்கள் இம்முகாமில் கலந்துகொள்ளலாம்.

இந்த முகாமை பற்றி கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இம்மாதிரியான முகாமை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தொடர்ந்து நடத்திவருகிறது என்று கூறினார்.

மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும் 87548 87568 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.