ஊட்டியில் கோடை மலர் கண்காட்சி: நாற்று நடும் பணி துவக்கம்

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை மாதமான மே மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது முதல் கட்டமாக, 35 ஆயிரம் தொட்டிகளில் சால்வியா, டெல்பீனியம், பென்ஸ்டிமன் உள்ளிட்ட மலர் நாற்றுகளை நடும் பணிகள் தொடங்கியுள்ளது.

ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளில் இருந்து பல்வேறு வகை மலர் விதைகள், வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காவின் பல்வேறு பகுதிகளில், ஐந்து லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.