இயற்கையை பாதுகாக்கும் விநாயகர் சிலைகள் – கோவை இளைஞர்களின் புதிய தயாரிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு ராசாயனங்களால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் ஏற்படும் நீர்மாசை தவிர்க்கும் வகையில் பசுமை கணபதி எனப்படும் , சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத, விதைகள் பல உள்ளடக்கிய விநாயகர் சிலையை தயாரித்து அசத்தி வருகின்றனர் கோவையை சேர்ந்த இளைஞர்கள் . விநாயகர் சதுர்த்தி இன்னும் சில தினங்களில் வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது  . அந்த கொண்டாட்டத்தின் இறுதியாக விநாயகர் சிலைகளை ஊர் வலமாக கொண்டு சென்று குளம் குட்டைகளில் கரைத்து விடுவது வழக்கம். ஆனால் அதன் பிறகு ஏற்படும் பாதிப்பை பற்றி பலரும் யோசிப்பதில்லை. பல ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர் நிலைகள் பெருமளவில் மாடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை நடத்தி வரும் கோவையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பசுமை கணபதி என்ற விநாயகர் சிலையை தயாரித்து வருகின்றனர். இயற்கை விதைகளை இணைத்து இந்த விநாயகர் சிலையை உருவாக்கி, சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் உருவாக்கி  உள்ள இந்த சிலை, முற்றிலும் களிமண்ணால் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் இரண்டு வகைகள் உள்ளது. அபார்ட்மெண்ட்டில் வாழும் நகரவாசிகளுக்கு ஏற்ப சிலையில் தக்காளி , வெண்டை, முருங்கை உள்ளிட்ட விதைகளை சிலையில் இணைத்து உள்ளனர் அதனை வீட்டிலேயே கரைத்து அதனை வீட்டு தோட்டத்தில் போட்டால் விதை முளைக்கத் துவங்கி விடும். அதே போல குளத்தில் கரைக்கும் விநாயகர் சிலைகளில் மீன்கள் பறவைகள் உட்கொண்டு பயன் பெரும் வகையில் மாக்காச்சோளம், கோதுமை, ரவை உள்ளிட்டவைகளை இணைத்து தயாரித்து உள்ளதால் உயிர் சூழலுக்கு ஏற்ற வகையில் அமைந்து உள்ளது. விநாயகர் சதுர்த்தி இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படும் சூழலில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக இந்த பணியில் கல்லூரி மாணவர்களும் களம் இறங்கி பணி செய்து வருகின்றனர். எந்த வித லாப நோக்கமும் இல்லமால் செயல்படுத்தப்படும் இந்த அமைப்பின் மூலமாக, சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளனர்.   இந்த சிலைகளில் , ஒரு அட்டை இணைக்கப்பட்டு, அதில் இந்த பசுமை கணபதியின் சிறப்புகள் மற்றும் அதில் உள்ளே வைக்கப்பட்டு உள்ள விதைகளின் விவரங்கள் இதில் அடங்கி உள்ளது. பாரம்பரிய கலாச்சார பண்டிகைகளை பாதிக்காத வகையிலும் , அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு தவிர்க்கும் வகையில் இந்த இளைஞர்கள் உருவாக்கிய விநாயகர் சிலை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. கோவை மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இவர்களுக்கு இந்த விநாயகரை பெறுவதற்கான ஆர்டர்கள் குவிந்து வருகிறது.