பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் கோவையில் காலமானார்

ராஜாதிராஜா, கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தால், அலைகள் ஓய்வதில்லை, கோட்டைமாரியம்மன் உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் தங்கம், பாசமலர், ஆகிய சின்னத்திரைகளில் புகழ் பெற்றவர் நடிகர் வெள்ளை சுப்பையா (வயது 78). இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி. கடந்த 5 வருடங்களாக கோவை மாவட்டம் மேட்டுபாளையம் சிவன்புரம் திலகர் வீதியில் வசித்து வந்த இவருக்கு, கடந்த 1 வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.  வெள்ளை சுப்பையாவின் மனைவி சாவித்திரி. இவர்களது ஒரே மகள் தனலட்சுமி. இவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் குவைத்தில் உள்ளார்.