புதிய சாதனை படைத்த எஸ்.என்.எஸ் பள்ளி மாணவர்கள்

எஸ்.என்.எஸ் அகாடமி பள்ளியில் நீச்சல் பயிற்சியாளர் சிவராசு தலைமையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களாகிய கவின், ஜெய் சிரவன், அனிருத்தன் என்ற மூன்று மாணவர்கள் ஆசிய பதிவு புத்தகத்திற்காக (breast stroke leg kick) கைகளை பின்புறமாக கட்டிய நிலையில், தொடர்ந்து 4 மணி நேரம் 19 நிமிடங்கள் 23 வினாடிகளில், 6 கிலோமீட்டர் (6000 மீட்டர்) நீந்தி புதிய சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த முயற்சியை எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களின் டெக்னிக்கல் டைரக்டர் நளின் விமல்குமார், பள்ளியின் முதல்வர் பாபி மாத்யூ பாராட்டியுள்ளனர்.