இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் உயிர்த் தொழில்நுட்பவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உயிர்த் தொழில்நுட்பவியல் உயராய்வுத் துறையில் கோவை இயற்கை அறிவியல் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயல் அறங்காவலரும் செயலருமான ப்ரியா சதீஷ் பிரபு, கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, இயற்கை அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனர் பார்த்திபன் , இயற்கை அறிவியல் அறக்கட்டளையின் நிர்வாகி மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உயிர்த் தொழில் நுட்பவியலின் பல்வேறு அம்சங்களில் பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்குவதோடு, பட்டறைகள், கருத்தரங்குகள், உரையரங்குகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும், உயிர் அறிவியலில் சமீபத்திய பயன்களை பயன்படுத்தி தொழில்நுட்ப திறன்களை வழங்குவதற்காக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவும், மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தவும் வகை செய்யும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.