புகையில்லா போகி: உபயோகமற்ற பொருட்களை பெற்றுக் கொள்ள சிறப்பு ஏற்பாடு

போகி பண்டிகையினால் சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில், உபயோகமற்ற பொருட்களை தீ வைத்து எரிப்பதை தவிர்ப்பதற்காக, அந்தப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான சிறப்பு ஏற்பாட்டை கோவை மாநகராட்சி செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:

புகையில்லா போகியை கடைபிடிக்கும் விதமாக தங்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருட்களை தீ வைத்து எரிப்பதை தவிர்ப்பதற்காக ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட 30 இடங்களில் உபயோகமற்ற பொருட்களை பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.