தேவையில்லாத வீடியோகளை அகற்ற ஒரு புதிய சாப்ட்வேர்!!!

ஃபேஸ்புக் மூலம் பரவும் தேவையில்லாத வீடியோ பதிவுகளை தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மென்பொருள் ஒன்றை சிங்கப்பூர் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை கூட சமூக வலைதளங்களில் நேரலையாக வெளியிடும் நிலை இப்போது இருக்கிறது. இது போன்ற அதாவது தேவையற்ற வீடியோவைத் தடுக்க புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“கிரே மேட்டிக்ஸ்” என்ற நிறுவனம் பேஸ்புக்கில் பதிவிடப்படும் மனதை பாதிக்கும் வகையில் உள்ள வீடியோக்களை தடுக்க மென்பொருளை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டது. செயற்கை நுண்ணறிவின் மூலம் பணியாற்றும் அந்த மென்பொருள், தேவையற்ற வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிடமுடியாத வகையில் 95 சதவீதம் கட்டுப்படுத்துகிறது.