ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பெண் பக்தர்களுக்கு பாஜக சார்பில் சேலைகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பெண் பக்தர்களுக்கு பாஜக சார்பில் சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலையிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் பாஜக 28 வது வார்டு பழையூர் மண்டல் சார்பில் கோவிலுக்கு செல்லும் பெண் பக்தர்களுக்கு சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வாகன ஏற்பாடுகளை இலவசமாக செய்து கொடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொது செயலாளர் ஏ. பி முருகானந்தம், தேசிய செயற்குழு உறுப்பினர் ஜிகே.செல்வகுமார், பிரச்சார பிரிவு மாநிலச் செயலாளர் வி.என் ராஜன், பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.