உடல் எடையை குறைக்க மாத்திரைகள் உட்கொள்வது சரியா ?

உலக அளவில் 2.8 மில்லியன் பேர் உடல் பருமன் காரணமாக இறக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

இன்றைய இளைஞர்களுக்கு உடல் எடையை சீக்கிரம் குறைக்க மாத்திரை எடுத்துக்கொள்கின்றன..

ஆய்வுகளின் அடிப்படையில், ஒர்க் ஃபிரம் ஹோம் போன்ற சூழல் அவர்களுக்கு எந்த உடல் உழைப்பும் இல்லாத நிலையை உருவாக்கியது. இதுவே உடல் எடை கூட முக்கிய காரணமாக இருந்தது. அதோடு வாழ்க்கை முறை மாற்றங்களும் இதற்கு மற்றொரு காரணம். இப்போது அனைவரும் அலுவலக வேலைக்கு செல்ல தொடங்கும்போது உடல் பருமன் என்பது பாடி இமேஜ் விஷயமாக மாறிவிட்டது.

இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்காகவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் .

பொதுவாக உடல் எடையை குறைக்க குறைந்தது 3 மாதங்களாவது எடுத்துக்கொள்ளும். பிஎம்ஐ க்கு ஏற்ற எடையை பெற வேண்டுமெனில் 6 மாதங்கள் முதல் 1 வருடம் ஆகும்.

தொப்பையை குறைக்க வேண்டும் என்றாலே 3 மாதங்கள் எடுக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாதத்தில் 10 கிலோ வரை குறைக்க வேண்டும் என்று நினைப்பது மனித உடல் வளர்ச்சிக்கு எதிரானது. அப்படி உடல் எடையை குறைக்க எந்த மருத்துவர்களும் அனுமதிக்க மாட்டார்கள் ..

இந்த மாத்திரைகளை உட்கொண்டால் ஒரே மாதத்தில் 10 கிலோ வரை குறைக்க முடியும். ஆனால் அது ஆரோக்கியத்திற்கு எதிரானது.

ஒருவருக்கு இந்த மாத்திரையை கொடுக்கும் முன் அவரின் உடலை பரிசோதனை செய்ய வேண்டும். பிம்எம்ஐ என்ன , உடல் எடை, அவருடைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், நோய், அறுவை சிகிச்சை, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் , தைராய்டு என பல பரிசோதனைகளுக்கு பின் மாத்திரை எடுப்பது நல்லது .

 

– பா. கோமதிதேவி